×

முகத்துக்கு மாஸ்க் ஓல்டு ஸ்டைல் மாஸ்கில் முகம்தான் நியூ ஸ்டைல்

புதுடெல்லி: முகத்தில் மாஸ்க் அணியும் போது, சம்பந்தப்பட்டவரின் முழு முகத்தையும் மறைத்துவிடுவதால், மாஸ்கில் மூக்கில் இருந்து தாடை வரையிலான பகுதியை அச்சடித்து தரும் புதிய தொழில்நுட்பம் கேரள மாநிலம் பாலக்காட்டில் அறிமுகம் ஆகி உள்ளது. கொரோனா வந்தாலும் வந்தது. சாதாரணமாக வலம் வந்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் இப்போது மாஸ்க்குடன் தான் காணப்படுகின்றனர். மாஸ்க் மிக முக்கியம் என்றாகிவிட்ட நிலையில், அதனால் ஒரு பிரச்னையும் உள்ளது. சம்பந்தப்பட்டவர் முகத்தை பார்க்க வேண்டும் என்றால், அவர் மாஸ்க்கை கழற்றினால்தான் உண்டு. சோதனைச்சாவடிகள் போன்ற இடங்களில் இது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

மேலும், தெரிந்தவர்களிடம் கூட மாஸ்க்கை கழற்றினால்தான் அடையாளம் கண்டுக் ெகாள்கின்றனர். இல்லாவிட்டால், யாரோ என்று நினைத்து விடும் அளவுக்கு மாஸ்க் முகத்தை மறைத்துவிடுகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் ரூ.100க்கு மூக்குப்பகுதியில் இருந்து, தாடை வரையிலான முகப்பகுதியை மாஸ்க்கில் அச்சடித்து தருகின்றனர். இதை அணியும்போது, சம்பந்தப்பட்டவரின் முகம் அப்படியே தெரிவது போன்ற ஒரு காட்சி ஏற்படுகிறது. இதனால் இந்த வகை மாஸ்க்குக்கு மவுசு கூடியுள்ளது. ஏற்கனவே பனியனில் போட்டோவை அச்சடித்து தரும் தொழில்நுட்பம்தான் இங்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சரியான நேரத்தில் சரியாக யோசித்து இந்த ெதாழில்நுட்பத்தை களமிறக்கி உள்ள வாலிபர்கள் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர்.



Tags : Face Mask Old Style , Mask Old Style, Mask, New Style
× RELATED இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு...